• Sep 20 2024

வெளியாகிய முதல் நாளிலேயே USAவில் மட்டும் 750k டாலர் வசூலித்த விக்ரம் படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் இயக்குநர் என்று அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் இதற்கு முதல் மாநகரம் ,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களையும் கொடுத்தவர். அதே போல விக்ரம் படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். இப்படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தெலுங்கு, ஹிந்தி, கேரளா என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிய இந்தப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் சூர்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் நிலையில் USAவில் மட்டும் படம் 750k டாலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் நாட்டு விபரங்கள் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement