• Jan 18 2025

கேரளாவில் சுக்குநூறாக நொறுக்கப்பட்ட விஜய்யின் சொகுசு கார்! ரசிகர்களின் வில்லத்தனம்.. வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிக்கும் கோர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி என நடந்து வந்த நிலையில், இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் காட்சி முடிந்து விடும் என சமீபத்தில் வெங்கட் பிரபு செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

மேலும் வெளிநாட்டில் இன்னும் ஒரு ஷெட்யூல் இருக்கு, அத்தோடு மொத்த படப்பிடிப்பும்  முடிந்துவிடும், நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு, ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும் என பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து இருந்தார்.

அது மட்டும் இன்றி இந்த படத்தில் விஜய் ஒரு பாட்டை பாடியுள்ளதாக ஜுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அத்துடன் த்ரிஷா இதில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், அவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாகவும் தகவல் வெளியானது.


தற்போது கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்றைய தினம் விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றுள்ளார் விஜய். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவுக்கு விஜய் செல்வதால் அவரை வரவேற்பதற்காக அங்குள்ள ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் என தடபுடலாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் அவர் இருந்த கார் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் தவித்துள்ளது. அதன் உள்ளே இருந்த விஜயும் இதனால் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் வந்த கார் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி நொறுங்கியுள்ளது. காரின் பின்பகுதி முன் பகுதி என பல இடங்களிலும் சேதம் அடைந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement