தமிழ் சினிமாவிலும் அரசியல் களத்திலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர்தான் விஜயகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.
விஜயகாந்த் இன்றைய தினம் இல்லை என்றாலும் அவருடைய 72 ஆவது பிறந்தநாளை ரசிகர்களும் தொண்டர்களும் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றார்கள்.
சினிமாவில் இனிக்கும் இளமை என்ற படத்தில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை வில்லனாக ஆரம்பித்தார். அதன் பிறகு பல வெள்ளி விழா படங்களுக்கு கதாநாயகனாகவே மாறினார். இனிக்கும் இளமை படத்தில் இருந்து இவருடைய பெயர் விஜயகாந்த் என மாற்றப்பட்டது.
தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் நாயகனாக நடித்த இவர் அதன் பின்பு பலராலும் அறியப்பட்டார். ஆரம்பத்தில் இவரை நிராகரித்த எல்லோரும் அதன் பின்பு விஜயகாந்தை தேடி வந்து தங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என வரிசையில் நின்றனர்.
ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் வணிகத்தை அன்றைய காலகட்டத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொண்டு சென்றார். யாரும் செய்ய நினைக்காததை செய்தவர் விஜயகாந்த்.
அதாவது சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது விஜயகாந்தின் படத்தில் தான். அதன் பின்னர் தான் மற்றவர்கள் இதனை பின்பற்ற தொடங்கினார்கள். அதற்காக தன் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை தயாரிப்பாளருக்கு விட்டுக் கொடுத்தார்.
இவ்வாறு சினிமா துறையில் கிங்காக இருந்த விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் களமிறங்கினார். இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உருவெடுப்பார் என அவர்களது தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் உடல்நிலை சரியாமல் போனது. இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இவரது மறைவு தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில், இன்றைய தினம் மறைந்த விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கு பற்றிய விஜயகாந்தின் இளைய மகள் சண்முக பாண்டியன் கூட்ட நெரிசல் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முக பாண்டியனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Listen News!