• Jan 19 2025

வெள்ளித்திரையில் நாயகனாக மிரட்டும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்! ரிலீஸான படம் எது தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் தனி இடத்தை பிடித்து நாளுக்கு நாள் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் முத்துவுக்கு அடுத்த கேரக்டரில் நடிப்பவர்தான் மனோஜ். அதிலும் முத்துவை விட இவரது கேரக்டர் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக காணப்பட்டது. அதற்கு காரணம் இவர் அடிக்கடி செய்யும் தில்லு முல்லு வேலைகள் தான்.

அதாவது ரோகிணியும் மனோஜூம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது போலவே சீரியல் நகர்கிறது. அதிலும் மனோஜ் ஆரம்பத்தில் ஜோசியர் சொன்னபடி பிச்சை எடுத்த காட்சிகள், பார்க்கில் படுத்து உறங்கிய காட்சிகள் என்பதை டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இதை தொடர்ந்து தற்போது மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவ் வெள்ளித் திரையிலும் கால் பதித்துள்ளார். அதன்படி அண்மையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்ட போட்டோ ரசிகர்களை கவர்ந்ததோடு, அவர்களும் ஸ்ரீதேவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வந்தார்கள்.


இந்த நிலையில், இன்றைய தினம் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவ் நடிப்பில் அதர்மக் கதைகள் என்ற படம் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இது தொடர்பில் அதே சீரியலில் நடிக்கும் பழனியப்பன் தனது வாழ்த்துக்களை சொல்லியதோடு ஸ்ரீதேவ் மேலும் பல படங்களில் நடித்து மேலும் பிரபலமாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement