• Jan 19 2025

விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஏஐ மூலம் உருவாக்கப்படும் கேரக்டர்.. செம ஃபைட் சீன் என தகவல்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் வளர்ந்து வரும் காலகட்டத்தில் விஜயகாந்த் அவருக்காக ஒரு படம் நடித்து கொடுத்த நிலையில் தற்போது விஜய் தனது அடுத்த படத்தில் விஜயகாந்த்தை ஏஐ மூலம் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் ஆரம்பகட்டத்தில் சில வெற்றிகள் பெற முடியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில் ’செந்தூரபாண்டி’ என்ற திரைப்படத்தில் விஜய்க்காக ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். அந்த படத்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கினார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னர் தான் விஜய்க்கு என தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜயகாந்த் சூர்யாவுக்கும் பெரியண்ணா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விஜயகாந்துக்கு நன்றி செலுத்தும் வகையில், அவர் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த் கேரக்டரை உருவாக்கி இருப்பதாகவும் விஜய் மற்றும் விஜயகாந்த் இணைந்து அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் செய்யும் வகைகள் அந்த காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதற்காக விஜயகாந்த் வீட்டில் அனுமதி பெற்று விட்டதாகவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜயகாந்த் ரசிகர்கள் அவரை பார்க்க ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் தற்போது அரசியல் கட்சியும் ஆரம்பித்து இருப்பதால் விஜயகாந்த் ரசிகர்களின் ஓட்டுக்களை பெறவும் இது உதவும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement