• Nov 12 2024

ஜூன் 4க்கு பின் ஒரு கோடி செலவு செய்ய போகும் விஜய்.. 1500 பேருக்கு அடித்தது லக்கி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்வை கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடத்தினார் என்பது தெரிந்தது.

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதோடு முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவிகளை கௌரவிக்க நிகழ்ச்சி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதம் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இதுவும் நான்காம் தேதிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும், ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வர இருப்பதை எடுத்து அதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட வேண்டும் என்றும் விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது என்றும் முதல் மூன்று இடங்கள் பிடித்த சரியான மாணவ மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் மொத்தம் 1500 மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் ரொக்க பரிசு வழங்க இருப்பதாகவும் இதற்காக 75 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு 25 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் இந்த விழாவுக்கு பட்ஜெட் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் தான் நாளைய வாக்காளர்கள் என்ற நிலையில் அவர்களுடைய வாக்குகளை கவர்வதற்காகவே விஜய் இந்த விழாவை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement