• Jan 19 2025

விஜய்க்கு 'க்' தெரியாது; அவரது பிள்ளைக்கு தமிழே தெரியாது; ஆனா தமிழன ஆள வந்துட்டாங்க! பிரபலம் செருப்படி கேள்வி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்த நிலையில், அண்மையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

மேலும், 2024 எங்கள் இலக்கு கிடையாது, நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம், 2026 தேர்தலில் நிற்போம், ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டோம் எனக்கூறி அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்து விட்டார். 

இதை தொடர்ந்து, விஜய் அரசியல் கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டி பேசுபொருளானது.

அதாவது, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் வெற்றி அருகே ‘க்’ என்ற எழுத்து வரவேண்டும் என்று சிலர் சுட்டிக் காட்டிய நிலையில் தற்போது அதை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.


இந்த நிலையில், விஜய்க்கு தமிழில் 'க்' தெரியாது. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது என பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

அதாவது, நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சியின் பெயர் தற்போது பிழை எனவும், அவர் கட்சியை ஆரம்பிக்கும் போதே தமிழில் புலமை மிக்க தமிழறிஞர்களிடம் கட்சியின் பெயரைச் சொல்லி எழுத்துக்களை திருத்தி இருக்கலாம் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

அத்துடன் தமிழை பிழையாக எழுதுபவர்கள் தமிழ் பேசும் தமிழனை எப்படி ஆள்வது என்ற கேள்விகளையும் தொடுத்து வருகிறார்கள்.


அதேவேளை, அவரது மகன் லைகா நிறுவனத்திற்காக படம் இயக்க  முன்வந்தபோதும் அது கிடப்பில் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால், அவருக்கு தமிழ் தெரியாதாம் ஆங்கிலத்தில் தான் எல்லாத்தையும் எழுதி வருகிறார். அப்படி இருக்கும் போது படத்தின் கதையை முழுமையாக எப்படி கொண்டுவர முடியும் என அந்த நிறுவனம் கேள்விகேட்டு உள்ளதாம்.

இவ்வாறு விஜய்க்கு தமிழில் க் தெரியாது. அவருடைய பையனுக்கு தமிழே தெரியாது. ஆனால் தமிழர்கள் என்ன அடிச்சாலும் தாங்குவாங்க நாம ஆளலாம் அப்படிங்கிற நினைப்பில் வந்திருப்பார் போல விஜய் என தாறுமாறாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement