• Jan 19 2025

மனைவிக்காக பெட்டி கடைக்கு இறங்கிய ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ..! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

2018ம் ஆண்டு வெளியான KGF படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகர் யாஷ்.

இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு தொடர்ந்து இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அத்துடன், அதன் இரண்டாம் பாகம் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து KGF 3-ம் பாகம் வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில், தனது மனைவி ஆசைப்பட்டு கேட்டார் என்பதற்காக பெட்டிக்கடை ஒன்றில் குச்சி மிட்டாய் வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் யாஷ்.

வட கன்னட மாவட்டத்தின் உள்ள சித்ரபூர் மாதா கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

தற்போது நடிகர் யாஷ் பெட்டிக்கடையில் நிற்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.



Advertisement

Advertisement