• Nov 13 2025

காவேரிக்காக வீடு வாங்கும் விஜய்.. கடும் அப்செட்டில் கங்கா.! பரபரப்பான திருப்பத்தில் மகாநதி

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்து வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. அந்த சீரியலின் promo தற்பொழுது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 


அதில், விஜய் சாரதாவைப் பார்த்து கொடைக்கானல் வீட்டை விற்க போறீங்கள் என்றால் அதை காவேரி பெயரில் நாங்களே வாங்கிறோம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கங்கா கோபப்படுறார். பின் சாரதா காவேரி வாங்கிறாள் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்கிறார்.


அதனை அடுத்து விஜய் வீட்டோட பெயர் மட்டும் தான் காவேரி பெயரில மாறுதே தவிர அது எப்பவுமே உங்க வீடு என்று சாரதா கிட்ட சொல்லுறார். மேலும் எப்பவுமே நீங்க அந்த வீட்டுக்கு வரலாம் என்கிறார் விஜய். அதைக் கேட்ட கங்கா நீங்க அந்த வீட்டை வாங்கிறது எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல என்று சொல்லுறார். 

Advertisement

Advertisement