• Sep 20 2024

விஜய் ஆண்டனியின் மழை ”பிடிக்காத மனிதன்’… வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த சுக்ரன் திரைப்படத்தில் இசை அமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி

இவர் அமைத்த இசைகளில் ஆத்திச்சூடி, டைலாமோ, நாக்குமுக்கா பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானார். இவருடைய பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பரவி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

இசையில் மட்டுமன்றி நடிப்பிலும் தன்னுடைய கை வரிசையை காட்டி வருகின்றார் நடிகர் விஜய் ஆண்டனி .இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் மேலும் சரத்குமார், சரண்யா, பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது .ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்தியாவில் இதுவரை யாரும் செல்லாத இடங்களான வட இந்தியாவில் டையூ டாமன் ஆகிய பகுதிகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் இப்போது முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துள்ளனர். இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். படக்குழுவினர் இப்புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement