• May 18 2026

விஜய் – திரிஷா தேர்தலுக்குப் பின்பு திருமணம்..? திரிஷாவின் தாய் செய்த செயல் வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா தொடர்பில் பரவி வரும் திருமண வதந்திகள் மேலும் பேசுபொருளாக மாறி வருகின்றன. சங்கீதாவின் விவாகரத்து தகவல்களுக்கு மத்தியில், சமீபத்தில் நடந்த திருமண வைபவம் ஒன்றிற்கு விஜயும் திரிஷாவும் ஒன்றாகச் சென்றது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில், விஜயின் மனைவி சங்கீதா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், நடிகை ஒருவருடன் விஜய்க்கு தவறான உறவு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது.

இது தொடர்பில் நடிகை திரிஷாவோ, விஜயோ எந்தவொரு விளக்கமும் வழங்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் ஒரே நிற ஆடையில் திருமண வைபவத்தில் கலந்து கொண்டது, இந்த செய்தியை உறுதிப்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்பட்டது.


இந்த நிலையில், விஜய் - திரிஷாவை தேர்தலுக்குப் பிறகு திருமணம் செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய பதிவிற்கு, திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் லைக் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

சங்கீதாவுடன் விவாகரத்து நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெறும் நிலையில், ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என சிலரும், இதற்கு எதிராக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement