• May 18 2026

திரிஷா எவ்வளவு மரியாதையான பெண் தெரியுமா.? குஷ்பு சொன்ன விஷயம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் 40 வயதைக் கடந்த போதும் இன்றும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருடைய கைவசம் தற்போதும் பல படங்கள் உள்ளன.

சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி இருந்தார். மேலும் அவருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்தாக தெரிவித்தார். இதனால் பலரும் விஜய்யும் திரிஷாவையும் இணைத்து பேசத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைகள் குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “இன்றைய காலத்தில் சிறிய விஷயங்களையும் பெரிதாக்கி பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. 


திரிஷா மிகவும் மரியாதையானவர், மென்மையான மனம் கொண்டவர். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.

மேலும், பிறரை விமர்சிப்பதில் சிலர் தவறான மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும், அவற்றை பொருட்படுத்தாமல் முன்னேற வேண்டும் என்றும் குஷ்பு தெரிவித்தார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி, திரிஷாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement