தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் விஜய் சேதுபதி. இவர் 2014 ஆம் ஆண்டு “விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், தனது பயணத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். தான் தயாரித்த பல படங்கள் தனக்கு நஷ்டத்தைத் தான் கொடுத்ததாக தயக்கமின்றி கூறினார்.
அதன்படி, ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, ஜுங்கா மற்றும் லாபம் ஆகிய நான்கு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த படங்கள் வசூல் ரீதியாக எந்த பலனையும் தரவில்லை என்றாலும், அந்த படங்களை நான் உண்மையாகவே நேசித்தேன் என்பதால் வருத்தம் இல்லை என கூறினார்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில், மிஷ்கின் இயக்கிய “ட்ரெயின்” படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படம் ஓடும் ரயிலில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. மிஷ்கினின் படங்களும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உள்ள நிலையில் இந்த படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்பட நிகழ்வில், “தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது. ஏதாவது பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லப் போனால், அப்புறம் நம்ம படத்துக்கு ஏதாவது செய்து விடுவாங்க. அதனால்தான் நான் வேண்டாம் என்று சொல்லிட்டேன். ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை பொறுப்பாக செய்ய வேண்டும்” என்று விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!