• Apr 29 2026

பிரதீப் ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றும் விக்னேஷ் சிவன்.! ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போன சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம், 'டியூட்' படத்தின் வெளியீட்டு காரணமாக முதன்முதலில் தள்ளிப்போனது. அதன்பிறகும் பலமுறை வெளியீடு தள்ளிப்போனதால் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.


இதைத் தொடர்ந்து, படக்குழு ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த தேதியிலும் படம் வெளியாகாது என்பது தெரியவந்துள்ளது.  

இந்நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில்  வெளியிட படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement