• Jun 20 2026

மமிதா பைஜுவை 'கர' படத்தில் கமிட் செய்தது ஏன்? விக்னேஷ் ராஜா விளக்கம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

‘கர’ திரைப்படத்தைச் சுற்றி உருவாகியுள்ள எதிர்பார்ப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 


ஒரு திரைப்படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்வதில் நடிப்பு திறன் மட்டுமின்றி, கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தும் தன்மையும் மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். ‘கர’ படத்திற்காக சுமார் 20 முதல் 25 பேர் வரை ஆடிஷன் செய்யப்பட்டதாகவும், ஆனால் மமிதா பைஜு அளித்த நடிப்பு மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் படங்களில் தமிழ் நடிகைகள் குறைவாக உள்ளனர் என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. திறமைக்கு முன்னுரிமை அளிப்பதே தனது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கர’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறுமா என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement