• Apr 17 2026

அர்ஜுன் ரெட்டி நாயகியா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி

shali / 2 days ago

Advertisement

Listen News!

சினிமா மீது கொண்டிருந்த தீவிர ஆர்வத்தால் குடும்பத்தை எதிர்த்து மும்பைக்கு வந்தவர் தான் ஷாலினி பாண்டே. தனது முதல் பெரிய வெற்றியாக அமைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் அவர் இந்திய திரையுலகில் மிகப்பெரிய கவனத்தை பெற்றார். 


அந்த படம் அவரது இயல்பான நடிப்பையும், திரைபிடிப்பையும் வெளிக்கொண்டு வந்து, ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் ஷாலினி பாண்டே, தனது திறமையை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் நிரூபித்து வருகிறார். சினிமாவுக்கு இணையாக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக, விதவிதமான போட்டோஷூட்டுகள் மூலம் தனது ரசிகர்களை எப்போதும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய கவர்ச்சியான போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டைலிஷ் உடைகளில் தன்னம்பிக்கையுடன் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

இளம் ரசிகர்கள் பலர் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் மற்றும் ஹார்டின்களை குவித்து வருவதுடன், அவரின் அழகையும் ஸ்டைலையும் பாராட்டி கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு, தனது நடிப்புத் திறமையுடன் சேர்த்து, தனது ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஷாலினி பாண்டே.


Advertisement

Advertisement