கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான "மைனா"திரைப்படதில் சுருளி கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் விதார்த் மற்றும்.மைனா திரைப்படத்திற்காக நார்வேயில் நடைபெறும் தமிழ் திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
தொடர்ந்து இணை கதாபத்திரங்கள் மற்றும் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த விதார்த் 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.மேலும் 2018 ஆம் ராதா மோகனின் இயக்கத்தில் வெளியான காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்தார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், அவருடைய நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று தற்பொழுது உருவாகியுள்ளது. அந்த திரைப்படத்திற்கு "அஞ்சாமை" என்று பெயரிடப்பட்டுள்ளதோடு இந்த திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக பிரபல நடிகை வாணி போஜன் நடித்துள்ளார்.
எஸ்.பி.சுப்புராமன் இயக்கி ட்ரீம் வாரியர் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஞ்சாமை படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.கதாநாயகன் குடும்பத்தின் பிண்ணனியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருப்பது நீட் தேர்வுக்கு எதிரான படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் செய்தி வெளியிடுகின்றன.
Listen News!