• Dec 04 2024

மொட்டைமாடியில் கிளாமர் காட்டும் நடிகை அஞ்சலி.. கூடவே போஸ் கொடுத்தது யார் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கற்றது தமிழ்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி. அதன் பின்பு இவர் நடித்த அங்காடித்தெரு மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

அதன் பின்பு நாடோடிகள் 2, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் என சிறந்த திரைக்கதைகளை தேடி எடுத்து நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகின்றார்.

d_i_a"

தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகின்றார் அஞ்சலி. குறிப்பாக தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களுக்கு மவுசு அதிகம்.


சினிமாவை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டும் அஞ்சலி அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மொட்டை மாடியில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சூட்டை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement