• Dec 07 2024

பிக் பாஸுக்கு லவ்வர் தேட தான் வந்தேன்.. ஆனாலும் கப்பு ஜெயிக்க முடியல.. வேதனையில் தர்ஷா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இவருக்கு மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதன் பின்பு விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் செய்வதை வழமையாக கொண்டுள்ளார். இதில் தனது போட்டோ ஷூட் மூலமே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து உள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது.

d_i_a

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கு பற்றினார். ஆனாலும் இவர் சிறப்பாக விளையாட்டை தொடராததன் காரணத்தினால் மக்களினால் வழங்கப்பட்ட வாக்குகளை அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்று மூன்றாவது வாரத்தில் வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது. 


அதன்படி அவர் கூறுகையில், எனக்கு வெளியில் யார் மேலேயும் லவ் வரல.. அதனால பிக் பாஸ் வீட்டுக்குள் போய் யார் மேலயாவது லவ் வந்து அது கல்யாணம் வரை போகும் என்று ஆசைப்பட்டேன்.. எனக்கு ஒரு லவ்வர் இருந்திருந்தால் ஜாலியா ஒரு  என்டர்டைன்மென்ட்டோட கப்ப ஜெயிச்சு இருப்பேன் என தெரிவித்துள்ளார். 

இதைக் கேட்ட ரசிகர்கள் அப்படி என்றால் பிக் பாஸ் வீட்டிற்கு லவ்வர் தேடத்தான் சென்றீர்களா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement