• Jan 18 2025

மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பெரும் எதிர்பார்ப்புடன் உருவான வேட்டையன் திரைப்படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அனிருத் இசையமைப்பில் வெளியான 'மனசிலாயோ' பாடல் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் நட்சத்திரங்கள் என பலர் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டிருந்தனர். இன்று பெரும் ஆட்டம் பாட்டம் என மாஸாக வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement