இந்திய சினிமாவின் பல்துறை திறமையாளர்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் மீண்டும் ஒரு வைரல் வீடியோவால் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார். கமல் ஹாசன் அவர்களின் மூத்த மகளான அவர், நடிகை மட்டுமல்லாமல் பாடகியாகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் ‘ட்ரெய்ன்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்பதால், ரசிகர்களின் கவனம் அவர்மீது அதிகமாக உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியே சென்றுகொண்டிருந்த போது, ஒரு ரசிகர் அவரை பார்த்து “ஹாய் அம்மா” என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக பதிலளித்த ஸ்ருதிஹாசன், “ஹே, நான் என்ன உன் அம்மாவா?” என்று சற்று கடுமையாகக் கேட்டார்.
அவரின் இந்த திடீர் பதிலால் அந்த நபர் உடனே அமைதியாகிவிட்டதாகவும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிலர் ஸ்ருதியின் நேரடி பதிலை ஆதரித்து கருத்து தெரிவிக்கையில், மற்றவர்கள் அது கொஞ்சம் கடுமையாக இருந்தது என்றும் கூறுகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!