• Feb 23 2025

அதுக்குள்ள கண்ணு பட்டிருச்சு போல, திடீரென சறுக்கி கீழே விழுந்த விசித்ரா- பதறிப் போய் ஓடிய விக்ரம்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பல கோடி மக்கள் பார்த்து ரசித்து வரும் நிகழ்ச்சியான பிக் பாஸ்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம் .இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வாம் பிக்பாஸ் வீட்டை விட்டு சரவண விக்ரம் அல்லது ரவீனா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.

இதனால் ஹவுஸ்மேட்ஸின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.அந்த நிலையில்  விக்கிரமின் அம்மாவும் அப்பாவும் பேசி கொண்டிருக்கும் வேளையில் ,நடந்து வந்து கொண்டிருந்த விசித்திரா சறுக்கி கீழே விழுந்துள்ளார்.இது பிக் பாஸ் வீட்டையே கொஞ்ச நேரத்துக்குள் கதி கலங்க வைத்து விட்டது .

எல்லாரும் பதறி வந்து விசித்ராவை தூக்கி எழுப்பி விட்டாங்க .இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பரவி விசித்ரா மேல் கண்ணு பட்டு விட்டது போல ,வருகின்ற எல்லாருடைய  குடும்பத்தாரும் விசித்ராவை பாராட்டுவதனால் கண்ணு பட்டு விட்டது எண்டு ரசிகர்கள் நகைச்சுவையாக பேசி வருகின்றனர்


Advertisement

Advertisement