• Oct 31 2024

சினிமாவிற்குள் நுழைய முதல் ப்ரியங்கா மோகன் இந்த வேலை தான் செய்தாரா?- இப்படியொரு பிளாஸ்பேக் இருக்கா?....

stella / 10 months ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியங்கா மோகன்.தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் ப்ரியங்கா ஜோடி சேர்ந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாகவே நடந்தது. 


தெலுங்கில் நானியுடன் கேங் லீடர், சர்வானந்துடன் ஸ்ரீகாரம் படங்களில் நடித்துள்ள ப்ரியங்கா, அடுத்ததாக மகேஷ்பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 அதே போல நடிகர் கவினின் 6வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள நிலையில், இந்தப் படத்தில் கவினுக்கு ப்ரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் கவின், எஸ்ஜே சூர்யா காம்பினேஷன் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டு வருகின்றன.

 படங்களில் பிஸியாக நடித்து வரும் ப்ரியங்கா மோகன், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் செய்த வேலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடல் அழகியாக இருந்த இவருக்கு கணிசமான வருமானமே வந்துள்ளது. அதன் பின்னர்தான் சினிமாவில் நடிக்க வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement