• Apr 17 2026

பிக் பாஸ் வீட்டில் ரவீனாவின் காதல் பற்றிய உண்மைகளை உடைத்த விசித்ரா! பூர்ணிமா செய்த காரியம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் மணி, ரவீனா. இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வர முதலே பிரபலமான ஜோடியாக விஜய் டிவியில் வலம் வந்தார்கள்.


மணி வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணி கொடுப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார். இதன் காரணமாக தான் ரவீனாவும் மணியை  சந்தித்து, அவரிடம் கொரியோகிராபி கத்துக்குறாங்க..

இது காதலா மாற,  நாம இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ வெளியிடுவதை நமது பெற்றோரும் பார்த்து இருப்பாங்க தானே, அப்போ அவங்களுக்கும் சம்மதம் என நினைத்துக் கொண்டு தமது காதலை மேலும் தொடர்ந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்றனர்.


பிக் பாஸ் சீசன் 7 இல் தற்போது பிரிஸ் டாஸ்க் நடைபெறும் நிலையில், ரவீனாவின் அம்மா வராமல், அவரது உறவினர் ஒருவர் வந்து, ரவீனா, மணியை சரமாரியாக கேள்வி கேட்டு இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள ரவீனாவின் காதல் விவகாரம்  தொடர்பில் விசித்ரா புறம்பேசியுள்ளார்.

அதன்படி, ரவீனா, மணி காதல் வீட்டுக்கு தெரியாது என்றும், அவர்களாக நினைத்துக் கொண்டு லவ் பண்ணியுள்ளார்கள் என்றும் பூர்ணிமா, மாயாவிடம் சொல்லுகிறார். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement