• Apr 17 2026

அனிமல் படத்தின் பாகம் இரண்டிற்கான லேட்டஸ் அப்டேட்..! அதிரடி காட்டிய இயக்குநர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் திரைக்கு வந்த அனிமல் திரைப்படம்  ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.  இந்த படத்தினை சிலர் புகழ்ந்தாலும் பலர் நேர்மறையான விமர்சனமே தருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அதன் பார்ட் டூ தயாரிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த அனிமல் படத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் கூட திரையுலக நட்சத்திரங்களில் சிலர் இப்படம் நன்றாக இருக்கிறது என கூறுகிறார்கள்.


இப்படத்தின் இரண்டாம் பாகம் அனிமல் பார்க் என்ற பெயரில் உருவாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தின் சூட்டிங் 2025ம் ஆண்டில்தான் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அக்டோபரில் பிரபாஸ் நடிப்பில் புதிய படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ள அவர், அதை தொடர்ந்து அனிமல் 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement