பிக் பாஸ் சீசன் 7 தற்போது தான் கலகலப்பாக இருக்கும் வகையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.
அதேபோல, இந்த முறை சீசனில் தான் அதிக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதன்படி வந்த ஐவரில் தற்போது தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தான் தமது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களில் இவர்கள் உள்ளே வந்து இருந்தாலும், மக்கள் மத்தியில் விரைவாகவே அமோக வரவேற்பை பெற்றனர்.
அதுமட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் வந்த பிறகு தான் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் அழுது புலம்பிய அர்ச்சனா போக போக ஆட்டத்தை புரிந்து கொண்டு தற்போது அனைவரையும் அடக்கி ஆளும் ஆவேச அர்ச்சனாவாக உருமாறிவிட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா பற்றி விக்ரமிடம் சில அதிர்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார் தினேஷ்.
அதன்படி அவர் கூறுகையில், அர்ச்சனாவுக்கு திறமை இருக்கு, ஆனா திறமையை விட மற்ற விஷயங்களை பார்க்கும் போது அது பொய்யா இருக்கு.. அவங்களுக்கு வெளில பெரிய சப்போர்ட் இருக்கு.. என சொல்லியுள்ளார். குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
#Dinesh abt #Archana
— Aadhavi (@Classicparktv) December 22, 2023
•talent irukku, genuine
•Ground work pala irukku #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil pic.twitter.com/rBJLppjzNG
Listen News!