இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற சமையல்காரராக காணப்படுபவர் தான் வெங்கடேஷ் பட். இவர் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி மிகவும் பிரபலம் அடைந்தார். அத்துடன் வெங்கடேஷ் பட் san Memorial இல் கேட்டரிங் படித்தார் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரையில் ஐந்து சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் வரை வெங்கடேஷ் பட் இதில் நடுவராக காணப்பட்டார். ஆனாலும் இந்த ஆண்டு ஆரம்பிக்க ஐந்தாவது சீசனில் பங்கு பற்ற முடியாமல் இதிலிருந்து விலகி சன் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக தலைமை தாங்கி இருந்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், வெங்கடேஷ் பட் அளித்த பேட்டி ஒன்றில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் பண்ணுவீங்களா? என கேட்டதற்கு, ஆமாம் ரொம்பவே நான் மிஸ் பண்றேன். குக் வித் கோமாளி எனக்கு பிறந்த வீடு போன்றது. அதில் உள்ளவர்களுடைய போன்ட் இன்றளவில் மட்டும் மகிழ்ச்சியாய் உள்ளது, என்றும் அதை மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் டிவிக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதில் உள்ள பிரபலங்களுடன் நான் கதைத்துக் கொண்டுதான் உள்ளேன். ஆனால் குக் வித் கோமாளி எனக்கு பிறந்த வீடு என்றால் டாப் குக்கு டூப் குக்கூ எனக்கு புகுந்த வீடு போன்றது. என்னதான் புகுந்த வீட்டில் இருந்தாலும் பிறந்த வீடு போல வராது அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
Listen News!