• Apr 01 2025

அநியாயம் பண்ணாதீங்க.. சிறப்பான ‘கோட்’ அப்டேட் தர்றேன்: வெங்கட்பிரபு

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அவ்வப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவை ரசிகர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்பதும் அவரும் மிக விரைவில் அப்டேட் தருகிறேன் என்று கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு புறம் ‘கோட்’ படப்பிடிப்பு, மறுபுறம் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள், இன்னொரு புறம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை கவனிக்க வேண்டிய நிலை என வெங்கட் பிரபு ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் பிஸியாக இருக்கும் நிலையில் அப்டேட் குறித்து தகவல் சொல்வதற்கு அவருக்கு நேரமே இல்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன.



இருப்பினும் ரசிகர்கள் விடாமல் அப்டேட் கொடுக்க வேண்டும் என்று வெங்கட் பிரபுவின் எக்ஸ் தள ஐடியை டேக் செய்து பதிவு செய்து வரும் நிலையில் வெங்கட் பிரபு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ’அநியாயம் பண்ணாதீங்க, அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பி’ என்று கூறியதோடு ’தயவு செய்து என்னை நம்புங்கள், ‘கோட்’ படத்தின் சிறப்பாக அப்டேட் விரைவில் வரும்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படக்குழுவினர் தரப்பில் இருந்து கசிந்த ஒரு முக்கிய தகவல்படி ஏப்ரல் 14ஆம் தேதி ‘கோட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் அந்த போஸ்டரில் விஜய்யின் இரண்டு கெட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில்,  யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Advertisement

Advertisement