• Apr 15 2026

இவருக்கு பதில் இவர்? ‘அண்ணா’ சீரியலில் நடந்த திடீர் மாற்றம்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும்அண்ணாசீரியல் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் திடீரென ஒரு நடிகருக்கு பதிலாக இன்னொரு நடிகர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரவணன் மீனாட்சிஉட்பட பல சீரியல்களில் நடித்த செந்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும்அண்ணாஎன்ற சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது. இந்த சீரியலுக்கு பார்வையாளர்களை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சீரியலில் செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.



இந்த சீரியல் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், தனது தங்கைகள் நால்வரையும் எப்படியாவது நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் ஒரு அண்ணனின் கதை தான் இந்த சீரியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் வெங்கடேசன் என்ற கேரக்டரில் நடித்து வந்த சந்தோஷ் என்பவர் திடீரென விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக இந்த சீரியலில் அஜய் பாரதி என்பவர் கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சந்தோஷ் இந்த சீரியலில் இருந்து ஏன் விலகினார் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement