• Sep 04 2025

கணவரின் பிறந்தநாள் பரிசால் ஷாக்கில் வரலட்சுமி..! இன்ஸ்டாவில் தீயாய் பரவும் வீடியோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 


சமீபமாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3’ நிகழ்ச்சியில் நடுவராக கலக்கியவரும் இவரே.

இந்நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி, வரலட்சுமிக்கு ஒரு பிரமாண்டமான பரிசு காத்திருந்தது. அவரது கணவர்  நிக்கோலாய் சச்தேவ், பிங்க் நிறத்தில் மிகுந்த ஸ்டைலிஷான 'போர்ஷே' கார் ஒன்றை பரிசாக வழங்கி அவரை அசத்தினார். 


இந்த அதிரடி பரிசை வரலட்சுமி நேரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இதே வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement