தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா விஜயகுமார், சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். அதன் பின்னர் அவர் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சமீபத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா, வனிதாவையும் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டரை வைத்து மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். மேலும், அவர் பார்த்திபனிடம் உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
வனிதாவின் தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளால், அவர் தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். எனினும், அவருடைய முதல் கணவரின் மகன் விஜயகுமார் வீட்டிலேயே வளர்ந்தார்.

தனது மகள் ஜோவிகாவையும் தன்னைப் போல சினிமாவில் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக வனிதா முயற்சி செய்து வருகிறார். அதற்காக முதலில் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார். ஆரம்பத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், பின்னர் அது குறைந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, பார்த்திபனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜோவிகா விஜயகுமார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!