பிரித்தானிய பேராதீக்கத்தின் கீழ் இருந்த இந்திய தேசம் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் சுதந்திரமடைந்தது. இன்றோடு இந்திய சுதந்திரமடைந்து 77 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் இன்று இந்தியா தனது 78ஆவது சுதந்திரதினத்தினை கொண்டாடுகிறது.
பிரிவினைகள் இல்லாது ஓர் ஒற்றை நாடக முன்னேற துடிக்கும் இந்தியா இன்று சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான வைரமுத்து அவர்கள் சுதந்திர தின வாழ்த்துடன் பாரதியார் பாடலை அடியாக கொண்டு தான் எழுதி "ஜெய்ஹிந்த்" படத்தில் வெளிவந்த "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்" பாடலை பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது பதிவில் "தேசத்தைத் தனி மனிதனும் தனிமனிதனை தேசமும் சுரண்டுவது ஓயும்வரை 142 கோடிக்கும் சுதந்திரம் பொதுவுடைமை ஆவதில்லை" என குறிப்பிட்டிருக்கும் வைரமுத்து சகமனிதரையும் அரசையும் நடக்கும் சமூக சீர்கேடுகளுக்காக சாடியுள்ளார்.
ஒரு சமயப் பண்டிகையின்
கொண்டாட்டக் கூறுகள்
ஒரு தேசியத் திருவிழாவுக்கு
ஏனில்லை?
நான் அறியாமலே
இந்தக் கொண்டாட்டம்
எனக்காகவும்தான் என்ற
உரிமைப்பாடு
ஏன் உணரப்படுவதில்லை?
தேசத்தைத் தனி மனிதனும்
தனிமனிதனை தேசமும்
சுரண்டுவது ஓயும்வரை
142 கோடிக்கும்
சுதந்திரம்
பொதுவுடைமை ஆவதில்லை… pic.twitter.com/OFxUDs9i5m
Listen News!