• Jan 18 2025

"தங்கலான்" படம் எப்படி இருக்கு? டுவிட்டர் வாசிகள் என்ன சொல்லுறாங்க? வாங்க பார்க்கலாம்..

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் விக்ரம் அவர்களின் அடுத்த திரைப்படமான தங்களால் இன்று உலகெங்கும்  திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே காலை முதல் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 


இப்படம் தரமான உருவாக்கம் எனவும், விக்ரமின் நடிப்பு பிரம்மிக்க வைப்பதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக சில சினிமா ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இப்படம் ரிலிசாகியுள்ளது. ஒரு சிலர் படம் அருமையாக இருப்பதாகவும், விக்ரம் உட்பட மற்றைய நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல நடித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் வாசிகள் தங்களது முதல் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த டுவிட்டர் போஸ்ட்... 



Advertisement

Advertisement