• Sep 20 2024

திடீரென சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா… எல்லாத்துக்கும் காரணம் இவர் தானாம்...என்ன ஒரு ஜாக்பாட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் விஜய் அஜித் கமல் ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இதனால் மக்கள் மத்தியில் தனக்னெ ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பேராதரவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க்ம் தளபதி 67 திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் 16 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தளபதி 67 திரைப்படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் ஆனால் அவர் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும், சில தயாரிப்பாளர்கள் திரிஷாவை தங்கள் படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் விஜய் படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் எகிறும் என்பதால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு ஏற்றிக் கூறி வருகிறாராம் திரிஷா. ஒரே தகவலால் திரிஷாவுக்கு சம்பள விஷயத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement