• May 19 2024

சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்க இயக்குநர் லிங்குசாமி செய்த செயல்-தீயாய் பரவி வரும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

செக் மோசடி வழக்கு இயக்குநர் லிங்குசாமி சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிரபல இயக்குநரான லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிப்பதற்காக, பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.

மேலும் இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவத்திற்கெதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தமாறு இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது.எனினும் இதையடுத்து இயக்குநர் லிங்குசாமி, 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் வழங்கினார்.

 அந்த காசோலைகள் பணம் இன்றி திரும்பியதால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.மேலும் இவ் வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பில் 6 மாதம் சிறை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து இயக்குநர் லிங்குசாமி பத்தாயிரம் ரூபாய் செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது

அத்தோடு  இந்த வழக்கை சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்ய இருப்பதாக லிங்குசாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது





Advertisement

Advertisement