• Apr 26 2024

பலகோடி சம்பளம் வாங்கிட்டு புளிச்சமாவு படம் எடுக்கறவங்க பேசுறாங்க- இயக்குநர் வம்சியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ரிலீசானது முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வந்தாலும், விமர்சன ரீதியாக சில சறுக்கல்களை சந்தித்த வண்ணம் உள்ளது. 


குறிப்பதக இப்படம் சீரியல் போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் வம்சி, வாரிசு படத்தை சீரியல் போல் இருப்பதாக விமர்சித்தவர்களை கடுமையாக சாடி இருந்தார். படம் எடுப்பது ஒன்றும் ஜோக் கிடையாது. அதற்கு பின்னால் எத்தனை பேருடைய கடின உழைப்பும், தியாகமும் இருக்கிறது தெரியுமா? சீரியல்களை ஏன் மிகவும் மட்டமாக பேசுகிறீர்கள்? சினிமா மற்றும் சீரியல் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என கூறி இருந்தார்.


அவரின் இந்த பேச்சை கிண்டலடித்து சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளார். வம்சியை sacrifice star என்று கிண்டலடித்து பதிவிட்டுள்ள அவர், உண்மைய சொன்னா பயங்கரமா கொந்தளிக்கிராறே? நாட்ல நீங்க மட்டும்தான் உழைக்கறீங்களா? மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? போதாக்குறைக்கு தியாகம் வேற பண்றாங்களாம். சீரியல் மாதிரி இருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா?” என சாடி உள்ளார்.


மற்றொரு பதிவில், “ஜேம்ஸ் காமரூன், ஸ்பீல்பெர்க் கூட தியாகம், ஹார்ட் ஒர்க்ன்னு புல்லரிக்கல. இந்த க்ரீன்மேட், கேரவன் செட்டப்போட, ஆப்பிள் ஜூஸ் குடிச்சிட்டு, பலகோடி சம்பளமும்  வாங்கிட்டு புளிச்சமாவு படம் எடுக்கறவங்க பேசுறாங்க பாரு பேச்சு.. 'ரத்தம் சிந்தி உழைக்கறோம், தியாகம் பண்ணுறோம்' என இயக்குநர் வம்சியை வம்பிழுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை.இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement