• Jan 18 2025

இதனால தான் சிங்கப்பெண்ணே சீரியல் டிஆர்பியில் No.1 இடத்தில் இருக்கு- உண்மையை உடைத்த சௌந்தர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்கப் பெண்ணே. டிஆர்பியிலும் முன்னணியில் இருந்தாலும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் சீரியலின் கதைப்படி கிராமத்துப் பெண்ணான ஆனந்தி தன்னுடைய குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்குவதற்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து எப்படியான கஷ்டங்களை எதிர் கொள்கின்றார் என்பைதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இந்த நிலையில் இந்த சீரியலில் காமெடி வேடத்தில் நடித்து வரும் சௌந்தர்யா அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சிங்கப்பெண்ணே சீரியல் வெற்றி பெறுவதற்கு இந்த சீரியலில் வேலை செய்யும் ஒவ்வொருத்தரும் தான் காரணம். குறிப்பாக இயக்குநர் இந்த சீரியலுக்காக ரொம்பவே வேலை செய்யிறாரு.


தொடர்ந்து இந்த சீரியல் முன்னணியில் நிற்பதைப் பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு, நிறையப் பேர் எங்களைப் பார்க்கிறாங்க என்பதே பெரிய விஷயம் தான். என்னை காமெடி வேடத்தில தான் நடிக்க கூப்பிட்டாங்க சீரியல் மூலம் நிறைய பேருக்கு என்னை தெரிந்து இருக்கு என்றும் அவர் ஓபனாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement