• Jan 19 2025

லோகேஷ் கனகராஜின் படங்களை விமர்சித்த அயலான் பட பிரபலம்- என்ன தான் உங்க பிரச்சினை- கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன்.இவர் தற்பொழுது இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் தற்பொழுது அயலான் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன்  ராகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.


24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அத்தோடு இந்தத்திரைப்படம் வருகிற ஜனவரி 12 ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் தயாரிப்பாளர், KJ ராஜேஷ், "அயலான் திரைப்படம் ஏற்கனவே ஒரு பிளாக்பஸ்டர். நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். போதை பொருள் பவுடர், ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்கள் போன்றவற்றை நம்புகிறவர்கள் அல்ல" என்று KJ ராஜேஷ் கூறியுள்ளார்.


இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜை தான் மறைமுகமாக இப்படி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இவருடைய பேச்சைப் போல படமும் இருக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement