• Feb 08 2023

இதனால் தான் புகார் கொடுக்கவில்லை – கல்லூரி விழாவில் நடந்த சம்பவம் குறித்து பேசிய அபர்ணா பாலமுரளி

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர். இவர் மலையாள சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை” என்ற படத்தின் மூலம் தமிழ் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த “மஹேஷிண்டே பிரதிகாரம்” என்ற படம் படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயரை கிடைத்திருந்தது.

மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் சில மலையாளப் படங்களில் பாடியும் இருக்கிறார். இதன் பின் இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார். அதன்பின்னர் ஜிவி பிரகாஷின் சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து இருந்த சூரரைப்போற்று படம் மூலம் தான்.


இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்தார். அத்தோடு இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் இவருக்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த வீட்ல விசேஷங்க படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். கார்த்தியுடன் பெயரிடாத படத்திலும், சில மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அபர்ணா. அந்த வகையில் தான் தங்கம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தன்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரியில் படக்குழுவினர் விழா ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது மாணவர் ஒருவர் அபர்ணாவிற்கு பூ கொடுத்துவிட்டு திடீரென கையை பிடித்துள்ளார். மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது திடீரென நடிகை அபர்ணாவின் தோள்களில் கையை போட்டுள்ளார். இதனை சற்றும் விருப்ம்பாத நடிகை அபர்ணா அங்கிருந்து சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்.


இதன் பின்னர் மீண்டும் மேடை ஏறிவந்த மாணவன் தான் தவறாக எதுவும் செய்யவில்லை உங்களுடைய ரசிகனாகத்தான் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்தேன் என்று கூறியுள்ளார்.அப்படி கூறுகையில் மீதும் அபர்ணாவிடம் கைகொடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் நடிகை அபர்ணா அந்த மாணவருக்கு கை கொடுக்கவில்லை. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை ஒருவரிடம் தகாதவாறு நடந்து கொண்ட போது தன்கம் படக்குழுவினரும், நடிகர் வினீத் ஸ்ரீனிவாசனும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்து அபர்ணா ‘எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் ஒரு மாணவர் என்னிடம் மோசமாக நடந்துகொண்டது வேதனையாக உள்ளது. ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரைத் தொடுவது சரியல்ல என்ற புரிதல் சட்டக்கல்லூரி மாணவனுக்கு இல்லாதது வேதனைக்குரியது. கையைப் பிடித்திழுத்தது, பின்னர் உடலில் கைவைத்து நிற்க வைக்க முயன்றது எல்லாம் ஒரு பெண்ணிடம் காட்டவேண்டிய மரியாதையல்ல. அந்த விவகாரத்தின் பின்னால் செல்ல நேரம் இல்லை என்பதால் நான் புகார் அளிக்கவில்லை. எனது எதிர்ப்புதான் எனது பதில்’ என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது மாணவர் சங்கம் ‘ஒரு மாணவன் நடிகையிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. கல்லூரி மாணவர்சங்க நிர்வாகிகள் அதை தடுக்க.அத்தோடு முயன்றதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம். இந்த நிகழ்வை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறோம். நடிகைக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு கல்லூரி மாணவர் சங்கம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது’ என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement