• Dec 01 2023

அமுதவாணனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்- அடடே இவரும் வெளியேறி விட்டாரா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு நாட்களே எஞ்சி உள்ளதால், டைட்டிலை யார் வெல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த வாரம் ஏடிகே நாமினேஷனில் சிக்கி எவிக்டாகி வெளியேறினார். 

இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், மைனா என 6 பேர் இருந்தனர்.இதில், 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் கதிர் வெளியேறினார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டது.


 3 லட்சத்துடன் வந்த பணப்பெட்டியில் மளமளவென 13லட்சம் ரூபாய் வந்ததும், கணிசமான தொலைக்காக காத்திருந்த அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறினார். தற்போது வீட்டில் 4பேர் மட்டுமே உள்ளனர்.


இந்த நிலையில் மைனா நந்தினியும் எவிக்டாகி வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது.இதனால் இப்போது வீட்டுக்குள் ஷிவின், அசீம் ,விக்ரமன் ஆகியோரே உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement