• Feb 08 2023

இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் ஆரம்பம்- எப்போது யாரெல்லாம் ஜாய்ன் ஆகிறாங்க தெரியுமா?

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!


கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மிரட்டியது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ரசிகனாக அவரை, அவரது சிறப்பை விக்ரம் படத்தில் வெளிக் கொண்டு வந்திருந்தார் லோகேஷ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், சூர்யா என நட்சத்திரப் பட்டாளங்களை சிறப்பாக பயனப்டுத்தியிருந்தார்.


இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், படத்தின் வெற்றி கமலை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் அரசியலில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்தடுத்தப் படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமிட்டாகி வருகிறார் கமல்ஹாசன்.


அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் படத்தை தயாரிக்கவுள்ள கமல், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்திலும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார்.இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கி நடத்தப்பட்ட நிலையில் வரும் 22ம் தேதி படத்தின் சூட்டிங் திருப்பதியில் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக திருப்பதியிலேயே படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், கமலுக்கு ஏராளமான ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர்.


இந்நிலையில் திருப்பதியில் மீண்டும் படத்தின் சூட்டிங் நாளை மறுநாள் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சித்தார்த் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ராம்சரணின் படத்திற்காக நியூயார்க் சென்றிருந்த இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் என்பதும் குறப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement