விஜய் டீவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவரே நடிகை நந்தினி. அன்று முதல் இவர் ரசிகர்களால் மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்திருந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துப் புகழ் பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் நடித்திருக்கின்றார். அத்தோடு தற்போது வெளியாகியுள்ள 'விக்ரம்' படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார்.
மைனா நந்தினிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இதன் பின்னர் நடிகை மைனா சீரியல் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்ற மைனா நந்தினி அவரது கணவருடன் இணைந்து 'மைனா விங்ஸ்' என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் குறும்புத்தனம் நிறைந்த காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருவார்.
சமீபத்தில் மைனா நந்தினியும் அவரது கணவரும் டுபாய் சென்றிருந்த நிலையில், அங்கு அவர்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை dupai tour vlogs என்ற பெயரில் வெளியிட்டு இருந்தார்கள். இவர் தனது மகன் துருவன் செய்யும் சேட்டைகள் எல்லாவற்றையும் வீடியோவாக வெளியிடுவது வழக்கம்.
Dhruvan Singing Skills 😂❤️ | Myna Wings #Shorts https://t.co/kTQErJ1anV via @YouTube
— keerthana (@Aishu42854263) June 26, 2022
இந்நிலையில் தற்போது இவரது மகன் மைக்கை பிடித்து பாடிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இவர் பெரிய பாடகராகவும் வருவார் என்றெல்லாம் கமெண்டுகளால் பாராட்டி வருகின்றனர். இதனை பார்த்த மைனா தம்பதியினர் உச்ச சந்தோஷத்தில் உள்ளனர்.
பிற செய்திகள்
- நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
- எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
- நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!
- தற்கொலைக்கு முயற்சி செய்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!