• Nov 23 2024

நடிகர் சூரிக்கு லவ் மேரேஜா? அரேஞ்ச் மேரேஜா? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது பிரபல ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் சூரி பற்றி சமூக வலைத்தளங்களில் பேட்டிகளும் தகவல்களும் வைரலாகி வருகின்றன.

நடிகர் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு பிறகு காமெடி நடிகராக இருந்த சூரியின் ரேஞ்சே தலைகீழானது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டானார். தற்போது வெளியான கருடன் படத்திலும் நாயகனாக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மேரேஜ் லவ் மேரேஜா? அரேஞ்ச் மேரேஜா என சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், பொதுவாக சினிமா நடிகர்கள் என்றாலே பொண்ணு கொடுப்பதற்கு பயப்படுவார்கள். அதற்குக் காரணம் சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லோரும் ஜெயித்தவர்கள் இல்லை. ஆயிரத்தில் பத்து பேர் தான் உச்ச நட்சத்திரமாக வெற்றி பெற்று திகழ்வார்கள்.

எனக்கு அரேஞ்ச் மேரேஜ் நடந்ததே பெரிய விஷயம். இதில எங்க லவ் மேரேஜ் நடக்கிறது. என்ன ஒரு பொண்ணு போலோ பண்ணி காதலிச்சு இருந்தா கூட நான் அந்த பொண்ணு கிட்ட காசு கேக்குற நிலைமை தான். அதற்கு காரணம் நான் சென்னையில் அந்த டைம்ல நிறைய கஷ்டப்பட்டேன். அப்படி இருக்கும்போது நான் எப்படி ஒரு பொண்ண லவ் பண்ண முடியும் என்று சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement