• Jan 19 2025

ரோகிணியை அம்மா என கூப்பிட்ட கிரிஷ்.. மறைந்திருந்த பார்த்த மீனா அதிர்ச்சி..! புதிய ப்ரொமோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கிரிஷ் ரோகிணியை தனது அம்மா என புரிந்து கொள்கிறான் என்பதும் ரோகிணியும் கிரிஷை தனது மகன் என ஒப்புக்கொள்ளும் சென்டிமென்ட் காட்சிகள் இருந்ததை பார்த்தோம். 

இந்த நிலையில் சற்றுமுன் புதிய முன்னோட்ட வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் கிரிஷுக்கு டாக்டர் கண் கட்டை அவிழ்த்தவுடன் நான் முதலில் அம்மாவ தான் பார்ப்பேன் என்று கூறி ரோகினியை பார்க்கிறான்.

அப்போது அம்மா என ரோகினியை கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்த நிலையில் ’இனிமேல் நான் உன்னை அம்மா என்று தான் கூப்பிடுவேன்’ என்று சொல்ல ’அப்படியே கூப்பிடு’ என்று ரோகினியும் சொல்கிறார்.

’நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து விடவா? என்று கிரிஷ் கேட்க அதற்கு ரோகிணி ’அதற்கென்று ஒரு காலம் உள்ளது, அப்போது நான் உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறேன்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது தான் மீனா திடீரென அங்கு வந்து அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது போல் தெரிகிறது. இருந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் ’ரோகிணி நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க அப்போது முத்துவும் பின்னாடியே வருகிறார்.

இத்துடன் முன்னோட்ட வீடியோ முடிவடைந்த நிலையில் மீனா மற்றும் முத்து முன்பாகவே ரோகிணி தான் தனது அம்மா என்று கிரிஷ் சொல்லிவிடுவானா? என்பதையும், அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் நிகழும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Advertisement

Advertisement