• Jul 27 2024

த்ரிஷாவுடன் விஜய் ஓய்வெடுக்க வெளிநாடு சென்றாரா? வைரலாகும் புகைப்படம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் விமானத்தில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து இருவரும் எங்கே செல்கிறார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் அவர் ஓய்வு எடுக்க வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய்  எப்போதும் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்க செல்வார் என்ற நிலையில் இந்த முறை அவரது குடும்பத்தில் பிரச்சனை என்பதால் தனியாக செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் தனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள மியாமிக்கு செல்வதாகவும் அங்கு சில நாட்கள் விஜய் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு சென்னை திரும்பிய பிறகு ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியுடன் விஜய், த்ரிஷா ஆகிய இருவரும் விமானத்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படத்தை சிலர் பதிவு செய்து வருவதால் விஜயின் நண்பர் த்ரிஷாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த புகைப்படம் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற போது எடுத்தது என்றும், இந்த புகைப்படத்திற்கும் விஜய் ஓய்வு எடுக்க தனது நண்பருடன் செல்வதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement