• Jul 16 2024

மறுபடியும் முதல்ல இருந்தா? ‘விடாமுயற்சி’ சில காட்சிகளை ரீஷூட் செய்ய மகிழ் திருமேனி முடிவு.. அஜித் அதிர்ச்சி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு  வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் சமீபத்தில் மகிழ்திருமேனி அளித்த பேட்டியில் இந்த படம் 60 முதல் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அதற்குள் 10% முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்த படத்தின் படப்பிடிப்பு பெரும் 60 சதவீதம் தான் முடிந்திருக்கிறது என்று இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்திருப்பது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவலாக உள்ளது.



அது மட்டும் இன்றி ’விடாமுயற்சி’ படத்தின் சில காட்சிகளை ரீஷூட் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அஜித் சில காட்சிகள் திருப்தி இல்லை என்று கூறினால் மறுபடியும் அந்த காட்சிகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் மகிழ் திருமேனி அந்த பேட்டியில் கூறியுள்ளது தான் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ் திருமேனி போகிற போக்கை பார்த்தால் இப்போதைக்கு படம் முடியாது என்று தெரிகிறது என்றும் அநேகமாக ’விடாமுயற்சி’ படத்திற்கு முன்பே ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக செலவு ’விடாமுயற்சி’ படத்திற்கு ஆகியிருப்பதால் இந்த படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று லைகா நிறுவனம் திட்டமிட்ட நிலையில் அதற்குள் படத்தை முடித்து மகிழ் திருமேனி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement