• Jan 19 2025

லவ் டாச்சர் செய்தவருக்கு ஃபரீனா போட்ட கண்டீசன்! உடனே ஆப்ரேஷன் செஞ்சிட்டாராம்?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் வில்லி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான்  நடிகை ஃபரினா ஆசாத். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் இவர் வில்லி  கேரக்டரில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பும் எதார்த்தமும் இன்றளவும் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

ஆரம்பத்தில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர், அதன் பிறகு விஜய் டிவி ,சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். மேலும் ஹாலிவுட் அண்ட் கேட், அஞ்சரைப்பெட்டி,  கிச்சன் கலாட்டா போன்ற நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியல் தான் நடிகையாக அறிமுகமானர். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

தற்போது விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டிக் டிக் டிக் என்ற ரியாலிட்டி ஷோவில் தோன்றியுள்ளார். மேலும் அனேகமான ரியாலிட்டி ஷோகளில் கெஸ்ட் ஆக வந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.


இந்த நிலையில், நடிகை ஃபரினா ஆசாத் தனது  காதல் அனுபவம் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது திருமணத்துக்கு முன்  நடிகை ஃபரினா ஆசாத் காதல் டார்ச்சரில் இருந்ததாகவும் இதன் போது ஒரு பையன் அவரை காதலிப்பதாக மிகவும் டார்ச்சர் செய்து கொண்டிருக்க, எங்க வீட்டில் முஸ்லிம் பையன் இல்லன்னா ஒத்துக்கவே மாட்டாங்க என பரினா பொய் சொல்லி உள்ளாராம்.

ஆனாலும் இதை உண்மையென நம்பி அந்தப் பையன் முஸ்லிம் ஆவதற்கு என்ன பண்ணனுமோ அதனை ஆஸ்பத்திரியில் போய் செய்து கொண்டுள்ளாராம். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement