• Jul 27 2024

தனுஷ் - நாகார்ஜூனா திடீர் ஃபைட்.. தள்ளி போகிறது ‘ராயன்’ ரிலீஸ் தேதி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த இயக்கி உள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 13 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் அடுத்த மாதத்திற்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் - நாகார்ஜுனா ஸ்டண்ட் காட்சிகள்  படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ‘ராயன்’ படத்தில் அவரே முக்கிய வேடத்தில் நடித்து இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் படத்தை பார்த்து திருப்தியாக இருப்பதாக கூறியுள்ளது. இந்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் ஜூன் முதல் வாரம் ’இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் ‘ராயன்’ இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலைக்கு தள்ளிப் போவதாகவும் அதனால் இசை வெளியீட்டு விழாவும் ஜூலை மாதம் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது. ‘ராயன்’ படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்றும் தெரிகிறது. 

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த ஸ்டண்ட் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் வெளியாகி ஒரு சில மாதங்களிலேயே ’குபேரா’ படத்தின் ரிலீஸ் தேதியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த விருந்து காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது

Advertisement

Advertisement