• Sep 20 2024

விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருக்கும் கதாப்பாத்திரம் இது தானாம்- மாஸ் அப்டேட்டால் கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சூர்யாவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு வசனம் எழுதியவர் தான் இயக்குநர் ரத்னகுமார் இவர் அண்மையில் ஓர் பேட்டியில் கலந்து கொண்ட போது விக்ரம் படம் பற்றி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரத்னகுமார்," சூர்யாவின் கதாபாத்திரம் மிகுந்த வலிமையான கதாபாத்திரம். அவர் நடித்த காட்சி வரும் போது திரையரங்கில் அனைவரும் நிச்சயம் ரசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்". இவருடைய பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement