• Apr 26 2024

'தளபதி 67' இல்.. விஜய்யுடன் இணைந்து நடிக்க மறுப்புத் தெரிவித்த முன்னணிக் ஹீரோ.. காரணம் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வாரிசு' படமானது கலவையான விமர்சனகளை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி படமாகவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். .


விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய்யை இயக்குவதால் தளபதி ரசிகர்கள் பலரும் ஆவலாக இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் இரட்டிப்பாகியுள்ளது. 


இவ்வாறு கேங்ஸ்டர் படமாக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஸ்கின் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை சீயான் விக்ரம் நிராகரித்துவிட்டதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.


அதாவது தளபதி 67 திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக விக்ரமை அணுகியுள்ளார் படத்தின் இயக்குநர் லோகேஷ். ஆனால் கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்ற காரணத்தினால் விக்ரம் அதில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. இதைப்போலவே லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலையும் நடிகர் விக்ரம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement